மனிதகுலம் இன்னும் எவ்வளவு காலம் பிழைத்திருக்க முடியும்? இன்னும் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு மனிதர்கள் வாழ வேண்டுமானால், சூரியனின் இறப்பு முதல் பல்வேறு அச்சுறுத்தல்களைக் கடந்தாக வேண்டும்.மிக மிகத் தொலைவில் உள்ள வருங்காலத்தைப் பற்றி நமக்கு உண்மையில் ஏதாவது தெரியுமா? அடுத்த மாதம் மழை பெய்யுமா என்பது பற்றி உறுதியாக நமக்குக் கணிக்கத் தெரியாத காரணத்தால், பல கோடி ஆண்டுகளுக்கு அப்பால் என்ன நடக்கும் என்பது பற்றி பேசுவது சாத்தியமில்லாததாகத் தோன்றலாம்.ஆனால், எல்லாமே வானிலை போலக் குழப்பமானதாக இல்லை. மிகத் தொலைவான கால கட்டத்தைக்கூட கணிப்பது சாத்தியமாகிறது. குறிப்பாக வானியல் மற்றும் அண்டம் பற்றிய கணிப்புகளில் இது சாத்தியம்.ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் சென்னையில் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியுமா என்று இப்போதே கூறிவிட முடியும். ஏனெனில் சந்திரன், சூரியன் மற்றும் பூமி ஆகியவை நிலையான, கணிக்கக்கூடிய சுற்றுப்பாதையில் நகர்கின்றன. இப்போது ஈர்ப்பு விதிகள் பற்றியும்...
[
Source: youtube.com] [
Comments ] [
See why this is trending]
Comments